ஊழலுக்கு எதிரான போராட்டம் குறித்து நாட்டு மக்கள் கூடிய நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அலவ்வ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டை கட்டியெழுப்ப தெளிவான அரசியல் நோக்கு இருக்க வேண்டும். தனிப்பட்ட மனிதர்கள் அல்ல.
அரசியல் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் இல்லாத திருடர்களை பாதுகாக்கும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய அரசியல் கட்சிகளுக்கு இருப்பு கிடையாது.
மேலும் இந்த தேர்தலில் ஊழல்வாதிகள், திருடர்களை வலுப்படுத்த மக்கள் நடவடிக்கை எடுக்கக் கூடாது. தேர்தலை ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பும் சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.