தான் திருடுவதை பார்த்து விட்டதால் கொடூரமாக கொலை செய்ததாக கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுவை அரும்பார்த்தபுரம் ரோஜா நகரை சேர்ந்தவர் பிரபுதாஸ், இவரது மனைவி தீபா(வயது 38), இவர்களுக்கு ஹரி பிரசாத் என்ற மகன் உள்ளார்.
இருவரும் அய்யங்குட்டி பாளையத்தில் உள்ள கால் சென்டரில் பணியாற்றி வருகின்றனர், இந்நிலையில் நேற்று காலை தீபா வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவலறிந்து சென்ற பொலிசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர், தீபாவின் தலையில் காயங்கள் இருந்தன.
விசாரணையில் எதிர்வீட்டு வாலிபர் மீது சந்தேகம் எழுந்துள்ளது, அவரை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக்கொண்டார்.
பொலிசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், மூன்று மாதங்களுக்கு முன்பு தான் இங்கு குடியேறினோம், நாங்களும் தீபா குடும்பத்தாரும் நண்பர்களாக பழகினோம்.
வேலைக்கு செல்லும் போது வீட்டு சாவியை எங்களிடம் கொடுத்துவிட்டு போவது வழக்கம்.
எனது தொழில் முடங்கியதால் பணத்திற்கு கஷ்டப்பட்டேன், ஒருநாள் தீபா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நகையை திருடினேன்.
என் மேல் சந்தேகம் வந்த போது தீபாவின் மாமியார் எடுத்துவிட்டதாக பொய் கூறினேன், அதை நம்பிவிட்டார்கள்.
மறுபடியும் பணத்திற்காக கஷ்டம் வந்த போது நகையை திருட முடிவு செய்தேன், அன்றைய தினம் மதியம் வீட்டுக்குள் நுழைந்து தேடிக்கொண்டிருந்த போது தீபா வந்துவிட்டார்.
உடனே பதறிப்போன நாள் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக அவரது வாயை பொத்தினேன்.
அருகில் மாத்திரை பாட்டில் இருந்தது, அதில் இருந்த மாத்திரைகளை ஒட்டு மொத்தமாக கொட்டி வாய்க்குள் திணித்தேன்.
யாரிடமும் சொல்லமாட்டேன், என்னை விட்டுவிடு என கெஞ்சினார், ஆனாலும் காட்டிக் கொடுத்துவிடுவார் என பயந்து சுவரில் தீபாவின் தலையை பலமுறை மோதினேன்.
அருகிலிருந்து காம்பஸை எடுத்து தீபாவின் தலை மற்றும் உடலில் குத்தியதால் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
உடனே, சாவியை எடுத்து மறுபடியும் வீட்டை பூட்டி விட்டு அங்கு இருந்து வெளியேறினேன், வீட்டு சாவியை என்னுடனே எடுத்து சென்றேன்.
அருகிலுள்ள குப்பைத் தொட்டியில் சாவியை வீசி விட்டு, சினிமா பார்த்து ரசித்தேன், வழக்கம் போல் வீட்டுக்கு வந்த போது பொலிசாரிடம் மாட்டிக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.