டென்மார்க்கில் ஆபாச வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்த இளைஞருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த ஆபாச வீடியோவை 12 முறை சமூக வலைதளத்தில் அந்த 20 வயது இளைஞர் பகிர்ந்துள்ளார்.
தொடர்பான விசாரணையில் குறித்த ஆபாச வீடியோவை கடந்த 2015 முதல் 2016 வரை 12 முறை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனிடையே குறித்த ஆபாச வீடியோவில் தோன்றிய இளம்பெண் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார்.
மட்டுமின்றி தமக்கு இழப்பீடாக சுமார் 13,000 யூரோ பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர் முறையிட்டுள்ளார்.
மேலும் அந்த இளம்பெண்ணுடன் தோன்றிய சிறுவர்கள் இருவர் தங்களுக்கும் 10,000 யூரோ இழப்பீடு பெற்றுத்தர கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் குறிப்பிட்ட வீடியோவில் தோன்றிய இளம்பெண் 15 வயதுக்கும் குறைவானவர் என தமக்கு தெரியாது என குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
டென்மார்க்கில் சட்டப்பூர்வ வயது 15 என்றபோதும், 18 வயதுக்கு உட்பட்டவர்களின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்வதும் வெளியிடுவதும் குற்றமாகும்.
இதனையடுத்து திங்கள் அன்று நடைபெற்ற விசாரணை முடிவில் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞருக்கு 30 நாட்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக மட்டும் டென்மார்க்கில் சுமார் 1,000 ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து விசாரணை துவக்கப்பட்டுள்ளது.