தேவையான பொருட்கள் :
* பெரிய மாம்பழம் – 2
* குளிர்ந்த பால் – 1 கிண்ணம்
* வெனிலா ஐஸ்கிரீம் – 1 கிண்ணம்
* ஜெல்லி – 2 மேசைக்கரண்டி
செய்முறை :
* மாம்பழங்களை தோலை நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* நறுக்கின மாம்பழத் துண்டுகளை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு, கூழாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
* அதே மிக்ஸியில் பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடிக்கவும்.
* பால் ஜெல்லி கலவையில் மாம்பழக் கூழை சேர்த்து ஒரு முறை அடித்து எடுக்கவும்.
* இந்த கலவையை பாக்ஸில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சுமார் 2 மணி நேரம் குளிரவிடவும்.
* அதன் பிறகு எடுத்து பரிமாறும் கோப்பையில் வைத்து மேலே வெனிலா ஐஸ்க்ரீமை வைத்து பரிமாறவும்.