விண்வெளி மையத்தில் பேட்மிண்டன் விளையாடிய விண்வெளி வீரர்கள்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பேட்மிண்டன் விளையாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த போட்டியில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் கலந்து கொண்டனர்.

புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் நடப்பதே சிரமமாக இருக்கும் நிலையில் வீரர்கள் பேட்மிண்டன் விளையாடினர்.

நான்கு பேரும் இரு அணிகளாக பிரிந்து விளையாடிய வீடியோ அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

When astronauts tossed the shuttle: First badminton match played in outer space

பூமிக்கு வெளியே பேட்மிண்டன் விளையாடியது இதுவே முதல்முறையாகும்.

இது குறித்து பேசிய ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர், ‘விண்வெளியில் விளையாடுவது செவ்வாய் கிரகத்திற்கு சென்று கொடி நாட்டுவதற்கு சமம்’ என கூறினார்.

மேலும் இது வீரர்களுக்கு மன அமைதியை கொடுப்பதோடு அவர்கள் இடையே நட்புறவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.