பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்ட்ரடாமஸ், கி.பி.3797 வரை உலகில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர்.
அவரை ஜோதிடர் என்று கூறுவதை விட ‘தீர்க்கதரிசி’ என்றே சொல்லலாம் போல. அந்த அளவுக்கு அவர் கூறிய ஆருடங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவது உலகை திகைப்புக்குள்ளாக்கி இருக்கிறது.
14-12-1503 ல் பிறந்து, 2-7-1566ல் மறைந்த இவர் வெளியிட்ட ‘ நூற்றாண்டுகள்’ என்ற நூலில்தான் சுமார் 3,000 பலன்களை இவர் கூறியுள்ளார்.
இந்த நூல் 942 செய்யுள்களைக் கொண்டது. ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு வரிகள் உள்ளன. இவைகள் காண்டமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு காண்டத்திலும் நூறு பாடல்கள் உள்ளன.
இவர் கூறிய ஆருடங்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துகளையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால், இவரது அந்த ‘நூற்றாண்டுகள்’ நூலை சற்று திகிலுடன்தான் புரட்டுகிறார்கள்.
லண்டனில் ஏற்பட்ட மாபெரும் தீ விபத்து, பிரெஞ்சுப் புரட்சி, ஹிட்லரின் எழுச்சியும் வீழ்ச்சியும், கென்னடியின் கொலை போன்றவை இவரால் முன்கூட்டியே துல்லியமாக கணிக்கப்பட்டவை.
இந்தியத் தலைவர்கள் பற்றியும் நாஸ்ட்ரடாமஸ் கூறிய ஆரூடங்கள் திகைக்க வைக்கிறன.
அவரது ஆறாம் காண்டத்தில் 74ம் பாடலில்,”மூன்று புறம் கடல் சூழ்ந்த நாட்டில் பெரும் அதிகாரம் கொண்ட பெண்மணி எதிர்கட்சிகள் ஒற்றுமை இன்றி இருப்பதால் அதிகாரத்தை மீண்டும் பெறுவார்.
தனது சொந்த மெய்காப்பாளர்களாலேயே அவர் 67ம் வயதில் கொல்லப்படுவார். இது நூற்றாண்டு முடிய 16 ஆண்டுகள் இருக்கும்போது நடக்கும்” என இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதைக் கணித்துக் கூறியுள்ளார்.
எமர்ஜென்ஸியினால் தேர்தலில் தோற்றுப்போன இந்திரா காந்தி எதிர்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் தமக்குள் சண்டை போட்டுக் கொண்டதால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதையும், 1984 ல் அவர் சொந்த மெய்காப்பாளர்களால் சுடப்பட்டதும் உலகம் அறிந்த நிகழ்வு.
இதே போல ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதையும் அவர் ஒன்பதாம் காண்டத்தில் 53ம் பாடலில் தெரிவித்துள்ளார்.
அதேப்போன்று அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றி,”ஒன்பதாம் மாதம் பதினொன்றாம் நாளில் இரண்டு இரும்புப் பறவைகள் பெரிய சிலைகள் மீது மோதும்” என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஆனால் இதை விட துல்லியமாக 10ம் காண்டம் 72ம் பாடலில், “1999ல் ஒன்பதாம் மாதம் வானிலிருந்து ஒரு பெரிய அரக்கன் தோன்றுவான்!” என்ற அவரது கணிப்பு அமெரிக்கர்கள் உள்ளிட்ட உலக மக்கள் அனைவரையும் திகைக்க வைத்தது!
2018- ல் என்ன நடக்கும்?
* ஒரு பெரிய யுத்தம் தொடங்கி அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும்.
இந்த யுத்தம் நீண்ட நாள் நீடித்து அனைவரையும் பீதிக்குள்ளாக்கும். இறுதியில் அமைதி ஏற்படும். அதே சமயம் அந்த அமைதியை வெகு சிலரே அனுபவிப்பார்கள்.
* ஒரு சக்திவாய்ந்த நில நடுக்கம், குறிப்பாக அமெரிக்காவின் மேற்கு பகுதியில் ஏற்படும். அதன் வீச்சு என்னவென்பதை உலகம் முழுவதும் உள்ள நாடுகள் உணர்ந்துகொள்ளும்.
* கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். ( இயற்கைச் சீற்றங்கள் மற்றும் மூன்றாவது உலகப் போர் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்படலாம் என இதற்கு விளக்கம் சொல்லுகிறார்கள் நாஸ்டர்டாமஸின் ஆருடத்தை அலசி ஆராய்பவர்கள்.
* நவீன மருந்துகளின் கண்டுபிடிப்பால் மனிதர்களின் ஆயுட்காலம் நீடிக்கும். குறைந்தபட்சம் 200 ஆண்டு காலமாவது வாழ்வார்கள்.
80 வயதுடைய நபர் 50 வயதுடைய தோற்றத்துடன் காணப்படுவார்… என்று போகிறது 2018-க்கான நாஸ்ட்ரடாமஸின் ஆருடங்கள்.