கழுத்தை வெட்டுவேன் என்று காட்டும் போது உள்ளே கழியாட்ட பார்டியில் கட்டோ கட்டென்று கட்டிக்கொண்டு இருந்த தமிழர்கள்!

கடந்த 4ம் திகதி இலங்கை சுதந்திர தினத்தன்று, லண்டனில் உள்ள ஸ்ரீலங்கா தூதுவராலயம் முன்பாக தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவேளை இந்திக்க பெஃனாண்டோ என்னும் சிங்கள ராணுவ அதிகாரி தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டியது யாவரும் அறிந்ததே. ஆனால் அன் நேரம் உள்ளே நடைபெற்ற விழாவில் பல தமிழர்கள் கலந்துகொண்டுள்ளார்கள் என்பது பலரும் அறியாத விடையம்.

இலங்கை சுதந்திர தின நிகழ்வை ஒட்டி, லண்டனில் உள்ள தூதரகத்தில் கழியாட்ட பார்டி ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பல சிங்களவர்கள் கலந்துகொண்டார்கள். இதில் கலந்து கொள்ள சில தமிழர்களுக்கும் அழைப்பு விடுக்கபப்பட்டிருந்தது. அவர்களும் உள்ளே சென்று உணவு அருந்தி, வைன் அடித்து கழிப்பில் இருந்துள்ளார்கள். இந்த வேளையே வெளியே ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது. அப்போது தான் கழுத்தை வெட்டுவேன் என அவன் சைகை காட்டி உள்ளான்.

லண்டனில் தமிழர் சிங்களவர் ஒற்றுமை என்ற போர்வையில் கிரிகெட் டீம் அமைத்து விளையாடும் சுணை கெட்ட இந்த நபர்களே இதில் பெரும்பாலும் அடங்குகிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழர்கள் தான ? என்ற கேள்வி எழுவதாக, இதில் கலந்து கொள்ள இருந்து இறுதி நேரத்தில் மனதை மாற்றிய நபர் ஒருவர் இணையத்திற்கு தெரிவித்துள்ளார்.