தாய், மகள் மீது கொலைவெறித் தாக்குதல்!!

தென்னிலங்கையின் பொத்தல, கிபி-எல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து, இரு பெண்களின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது.கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலையான நிலையில் மீட்கப்பட்ட இந்தச் சடலங்கள் தாய் (45) மற்றும் அவரது மகளுடையது (25) எனத் தெரிவிக்கப்படுகிறது.அவர்கள் வசித்து வந்த வீட்டில் நேற்றிரவு (6) சுமார் பத்தரை மணியளவில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.மேலும், குடும்பப் பிரச்சினையொன்றின் பேரில், மகளின் கணவரே இந்தக் கொலைகளை அரங்கேற்றியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.தலைமறைவாகியிருக்கும் மருமகனைத் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.