கோரப் பசியில் வந்த எமன்!! குருநாகலில் 24 பேர் படுகாயம்!

குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதி படகமுவ முகலான பிரதேசத்தில், இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்து மற்றும் பாரவூர்தி ஒன்று நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானது.குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்த 24 பேர் மற்றும் பாரவூர்தியின் சாரதி காயமடைந்து குருநாகல் மற்றம் பொல்கஹவெல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.