இந்தியாவின் ஹைதராபாத் நகரில், எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள உலக தகவல் தொழில்நுட்ப காங்கிரசின் 22 ஆவது மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த மாதம் நடுப்பகுதியில் இந்தியாவுக்குப் பயணிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
உலக தகவல் தொழில்நுட்ப காங்கிரசின் மாநாடு முதல் முறையாக இந்தியாவில் நடக்கவுள்ளது.
இந்த மாநாட்டில் 30 இக்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.