`நானும் தமிழன்தான்; தமிழை நீக்கவில்லை!’ – விமான நிலைய இயக்குநர்

சென்னை விமான நிலையத்தில், விமானங்களின் வருகை, புறப்பாடு குறித்த தகவல்களை அறிந்துகொள்ளும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகையிலிருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளதாக, இன்று காலை தகவல் வெளியானது.

விமானங்களின் வருகை, புறப்பாடுகுறிதந்து சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகையில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளில் அறிவிப்பு வெளியாகும்.

View image on TwitterView image on TwitterView image on TwitterView image on Twitter

இந்நிலையில், இனிமேல் ஆங்கிலத்தில் மட்டும்தான் அறிவிப்பு வெளியாகும் என விமான நிலைய இயக்குநர் கூறியதாக ஒரு தகவல் பரவியது. காலை நேரங்களில் அதிகமான விமானங்கள் இயக்கப்படுவதால், மூன்று மொழிகளில் அறிவிப்பு வெளியாவதால் தாமதம் ஏற்படுவதாகக் கூறி தமிழ், இந்தி மொழி அறிவிப்புகள் நீக்கப்படுவதாகக் கூறப்பட்டது. இதற்கு, மக்கள் மத்தியில் பெரும்  எதிர்ப்பு கிளப்பியது. தற்போது, விமான நிலைய இயக்குநர் சந்திரமெளலி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். ‘இன்று காலையில் அதிகமான விமானங்கள் இயக்கப்பட்டதால், சென்னை விமான நிலைய பெயர்ப்பலகையில், ஆங்கிலத்தில் மட்டும் அறிவிப்பு வெளியானது. மேலும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகையில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் இன்று காலை இந்தப் பிரச்னை ஏற்பட்டது. தற்போது, அது சரிசெய்யப்பட்டுவிட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் விமான நிலைய இயக்குநரைத் தொடர்புகொண்டு, ‘அறிவிப்புப் பலகையிலிருந்து தமிழை ஏன் நீக்கினீர்கள்’ என்று கொந்தளித்துள்ளனர். அதற்குப் பதிலளித்த இயக்குநர் சந்திரமெளலி, ‘நானும் தமிழன்தான். டிஜிட்டல் பலகையிலிருந்து தமிழை நீக்கவில்லை’ என்று விளக்கம்கொடுத்துள்ளார்.