இராணுவத்தினருக்கு முல்லைத்தீவில் கிடைத்த அதிர்ச்சி!

முல்லைத்தீவில் புகைக்கசிவு பரிசோதிக்கும் நிலையத்திற்கு சென்ற இராணுவ வாகனம் ஒன்றை பரிசோதனை செய்ய முடியாது என இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

வாகனம் ஒன்று புகைக்கசிவு தரநிர்ணயத்திற்கு அமைவானது என உறுதிப்படுத்தப்பட்டு வழங்கப்படும் சான்றிதழுக்கு அமைவாகவே வாகன வருமான அனுமதி பத்திரத்தினை பெற்றுக்கொள் முடியும்.

இந்நிலையில் வாகன புகைக்கசிவு பரிசோதனைக்காக இன்று காலை கொண்டு செல்லப்பட்ட இராணுவ வாகனம் ஒன்றிற்கு சரியான ஆவனங்களை இராணுவத்தினர் சமர்பிக்கத் தவறியுள்ளனர்.

இதன் காரணத்தினால் புகைக்கசிவு பரிசோதனை செய்ய முடியது என அந்த வாகனம் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் புகைக்கசிவு பரிசோதகர்களுடன் இராணுவத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள போதும் அது பயனளிக்கவிலை.

சரியான ஆவணங்கள் சமர்பிப்பதன் மூலமே புகைக்கசிவு பரிசோதனை செய்ய முடியும் என பரிசோதகர்கள் இராணுவத்தினருக்கு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த வாகனத்திற்குரிய சரியான ஆவணங்களை பெற்றுக்கொள்ள இராணுவத்தினர் முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் அதிகாரிகளை மிரட்டு தமக்கான தேவைகளை பூர்த்தி செய்த இராணுவத்தினர், தற்போது உரிய ஆவணங்களை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.