விசுவமடு பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் இன்று திடீரென மரணமடைந்துள்ளார்.
விசுவமடுவின் குமாரசாமிபுரம், புன்னை நீராவியில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான வீரப்பன் என்று அழைக்கப்படும் சந்திரச்செல்வன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராட்டம் செய்ததில் இரண்டு கால்களையும் இழந்ததுடன், கைகளிலும் காயங்கள் ஏற்பட்டிருந்தன.
விடுதலைப் போராட்டத்தில் இணைந்த சந்திரச்செல்வன் மிகுந்த வறுமை நிலையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரது பிரிவு அவரது குடும்பத்தாருக்கு மிகுந்த கவலையை கொடுத்துள்ளது.