பெண்களே உஷார்! கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் ஆபத்தா?

முன்பெல்லாம், நமது வீட்டில் தாத்தா, பாட்டி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால், அப்படி உட்காராதே தவறு என அதட்டுவார்கள்.

வீட்டில் சாதாரணமாக சோபாவில், நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது, பேப்பர் படிக்கும் போது, டிவி பார்க்கும் போது, யாருடனாவது பேசும் போது என பல சமயங்களில் நாம் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்போம்.இதை பல சமயங்களில் மரியாதை தவறுதல் என்றும் கூட கூறுவார்கள். ஆனால், இன்றைய சோசியல் உலகில் இது சர்வசாதாரணம்.

ஆனால், சமீபத்திய அறிவியல் கூற்றின் படி, கால் மீது கால் போட்டு அமர்வது உடல்நலனுக்கு கேடு விளைவிக்கிறது என ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.ஆண்களை காட்டிலும் பெண்கள் மத்தியில் கால் மீது கால் போட்டு அமரும் வாடிக்கை அதிகமாக இருக்கிறது.

இதை அழகு நயம் வாய்ந்தது அல்லது பெண்பால் உடல்மொழி என்பது போன்ற மனப்பான்மை உருவாகும் அளவிற்கு பெண்கள் அதிகமாக கால் மீது கால் போட்டு அமர்கிறார்கள்.

கடந்த 2010-ம் ஆண்டு நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் கால் மீது கால் போட்டு நீண்ட நேரம் அமர்வது உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்க காரணியாக இருக்கிறது.மேலும் இரத்த அழுத்தம் சார்ந்த வேறுசில உடல்நல குறைபாடுகள் ஏற்படவும் இது காரணியாக இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

கால் மீது கால் போட்டு உட்காருவதால், கீழ் உடலை விட மேல் உடலில் அதிக இரத்த சுழற்சி உண்டாகிறது. இதனால் இதயம் அதிகமாக இரத்தத்தை பம்ப் செய்கிறது.இது இரத்த அழுத்தம் உண்டாக முக்கிய காரணியாக திகழ்கிறது.

சிலந்து போல நரம்புகள் கால்களில் தென்படுவதை ஸ்பைடர் வெயின் என்பார்கள். கால் மீது கால் போட்டு அதிக நேரம் உட்காருவதால் இந்த ஸ்பைடர் வெயின் பிரச்சனை உண்டாகலாம்.ஒரு நாளில் மூன்று மணி நேரத்திற்கும் மேல் நீங்கள் கால் மீது கால் போட்டு உட்காருவதால். முதுகு வலி, கழுத்து வலி, இடுப்பில் அசௌகரியமான உணர்வு போன்றவை உண்டாகிறது.

எனவே, முடிந்த வரை இனிமேல் கால் மீது கால் போட்டு அமர்வதை தவிர்த்துவிடுங்கள்.