இனவெறி தாக்குதலுக்கு ஆளானேன்: மனம் திறந்த பிரபல திரைப்பட நடிகர் மாதவன்

சிறுவயதில் தான் இனவெறி தாக்குதலுக்கு ஆளானதாக பிரபல திரைப்பட நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் மாதவன் வட மாநிலமான பீகாரில் தமிழ் பெற்றோருக்கு பிறந்தார்.

அங்கு வாழ்ந்த நாட்களை மாதவன் நினைவுக்கூர்ந்து பேசியுள்ளார், சிறுவயதில் நான் மதராசி என அழைக்கப்பட்டேன், இதோடு எல்லா வகையான இன பாகுபாடுகளும் எனக்கு எதிராக நடக்கும்.

எனக்கு 20 வயதாகும் வரையில் அது இனவெறி தாக்குதல் என்பது கூட எனக்கு தெரியாது.

தற்போது தான் இனவெறி தாக்குதல் குறித்து இந்தியாவில் மக்கள் நல்ல விழிப்புணர்வோடு இருக்கிறார்கள்.

அந்த சூழலில் வாழ்ந்தது எனக்கும் ஒன்றும் கடினமானதாக இல்லை, பாகுபாடு காரணமாக எந்தவொரு வாய்ப்பையும் இழந்ததாக நான் நினைக்கவில்லை.

இளம் வயதிலேயே என்.சி.சி மூலம் ராணுவ பயிற்சியை எடுத்துள்ளேன், இதெல்லாம் எனக்கு நல்ல தைரியத்தை கொடுக்கும் அனுபவமாக இருந்தது.

என் பாதை மாறியதால் நான் வருத்தப்படவில்லை, இப்போது நான் இருக்கும் துறை தான் உலகிலேயே சிறந்த துறை என எனக்கு தோன்றுகிறது என கூறியுள்ளார்.

மனைவி சரிதா பிர்ஜி மூலம் மகாராஷ்டிரா கலாச்சாரமும், மொழியும் கூட மாதவனுக்கு அத்துப்படியாக உள்ளது.

மராத்தியில் கவிதை கூட சரளமாக எழுதும் மாதவன் அந்த மொழியில் திரைப்படம் நடிக்கும் வாய்ப்புக்காக காத்துள்ளதாக கூறுகிறார்.