அழிவை ஏற்படுத்தும் கடுமையான பனிப்பொழிவு பரிஸில்!

பரிஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தீவிர குளிர் மற்றும் பனிப்பொழிவுகள் ஒரே இரவில் மூழ்கடித்துள்ளது. இதன்காரணமாக போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டதுடன் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டுள்ளது.

அதிக பனிப்பொழிவு காரணமாக நேற்று பரிஸ் பிராந்தியமான Ile-de-France இல் 700 கிலோமீற்றர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நூற்றுக்கணக்கான வாகன சாரதிகள் பல மணிநேரம் காத்திருக்கவேண்டி இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பரிஸில் பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் புறநகர் பாடசாலை பேருந்து சேவைகளும் இன்று புதன்கிழமை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ரயில் போக்குவரத்துக்கள் இன்றைய தினம் பாதிக்கப்படகூடும் என்றும் குறிப்பாக Ile-de-France கடுமையாக பாதிக்கப்படும் என்றும் மக்கள் தமது பயணங்களை தள்ளிவைக்குமாறும் எஸ்.என்.சி.எவ் ரயில்வே நிறுவனம் பரித்துரைத்துள்ளது.

அதுமட்டுமின்றி ரயில் சேவைகள் வேகக் கட்டுப்பாட்டுடன் இடம்பெறுவதால் பயணங்களில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பனிபொழிவு காரணமாக விமான சேவைகளும் சில ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.