உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொடர் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வரும் வடகொரியா இன்று தனது பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளது.
வடகொரியா இராணுவத்தின் 70வது ஆண்டை கொண்டாடும் வகையில், இந்த இராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப விழா நாளை இடம்பெறவுள்ள நிலையில், வடகொரியா இன்று தனது பிரமாண்ட இராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளது.
இந்த இராணுவ அணிவகுப்பில் பல்வேறு ஏவுகணைகள் அணிவகுக்கப்பட்டிருந்துடன், பல்லாயிரக்கணக்கான படையினர் அணிவகுப்பில் கலந்துகொண்டுள்ளதான தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளை பிரமிக்க வைக்கும் நோக்கிலும், வட கொரியா தனது இராணுவ பலத்தை பெருமையாக காட்டிக்கொள்ளும் நோக்கிலும் இந்த அணிவகுப்பை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அணிவகுப்பு வழக்கமாக ஏப்ரல் மாதம் நடைபெறும். ஆனால் இதனை முன்னரே நடத்தியிருப்பது குளிர்கால ஒலிம்பிக் போட்டி மூலம் வட மற்றும் தென் கொரிய உறவுகளை புதுப்பித்து கொள்வதற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.