போலீஸாரின் தொடர் விசாரணையில் மாணவர் ரஞ்சித் குமார், தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடிதத்தில், ”அம்மா, நான்தான் உங்க ரஞ்சித், எங்க பள்ளிக்கூடத்தில் என்னை பசங்க எல்லாரும் ஒரு பொண்ணாத்தான் பார்க்கிறாங்க. அதனால்தான் நான் இந்த ஒரு முடிவை எடுத்துட்டேன். அதனால் என்னை மன்னிச்சிடுங்க. என்னோட ஆசை நீங்க இந்த வீட்டை விட்டு போக வேண்டாம். எனது மரணத்துக்கு பிரகாஷ், ஹரிசங்கர், தனுஷ் ஆகியோர்தான் காரணம். எனக்கு நடந்ததுபோன்று வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. என்னை மன்னிச்சுருங்க, இப்படிக்கு உங்கள் அன்பு மகன் ரஞ்சித்” எனக் கடிதம் முடிகிறது. இதனையடுத்து போலீஸார் ரஞ்சித் குமார் படித்த இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் ஒருவர் தன்னை, சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.