மாசி மாத தேய்பிறையில், கிருஸ்ணபட்ச சதுர்த்தசியன்று வருவதே சிவனுக்குரிய ஐந்து சிவராத்திரிகளில் ஒன்றான மகா சிவராத்திரியாகும்.
மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி எனும் ஐந்து சிவராத்திரிகளிலும் மகா சிவராத்திரி சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.
உயிர்கள் செயலற்று ஈசன் நினைவாக ஒடுங்கும் காலமே இந்த சிவராத்திரி காலமாகும். இந்த மகா சிவராத்திரி நாளின் மூன்றாம் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும் என்பது நம்பிக்கையாகும்.
சிவராத்திரி விரதத்தை கடைபிடிப்பது எவ்வாறு?
- முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்களை தவிர்த்து, மனதார சிவனை நினைத்து வழிபட வேண்டும்.
- சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும்.
- அதன் பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று ஆலய தரிசனம் செய்ய வேண்டும்.
- ஆலய தரிசனம் முடிந்து வீடு திரும்பியவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.
- அன்றைய தினத்தில் பகலில் நீராடி, உச்சி கால பூஜைகளை முடித்துவிட வேண்டும்.
- அதன் பின், ஆலயத்திற்கு சென்று சிவராத்திரி பூஜைக்காக, மலர்கள், பழங்கள், இளநீர் முதலானவற்றில் முடியுமானவற்றை கொடுக்க வேண்டும்.
மகா சிவராத்திரி தினத்தன்று அலயத்தில் நடைபெறும் பூஜைகள் தொடர்பான விளக்கங்கள் காணொளியில்..