09.02.2018 ஏவிளம்பி வருடம் தை மாதம் 27 ஆம் நாள் வெள்ளிக்கிழமை
கிருஷ்ணபட்ச நவமி திதி மாலை 4.10 வரை. அதன் மேல் தசமி திதி. அனுஷம் நட்சத்திரம் முன்னிரவு 8.30 வரை. பின்னர் கேட்டை நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை நவமி. சித்தயோகம் சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பரணி, கார்த்திகை. சுபநேரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.30– 5.30, ராகுகாலம் 10.30 – 12.00, எமகண்டம் 3.00 –4.30, குளிகை காலம் 7.30 – 9.00, வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்) ராமதசா நவமி திக்கோகர்ணம் சிவபெருமான் புறப்பாடு.
மேடம் நன்மை, யோகம்
இடபம் செலவு, பற்றாக்குறை
மிதுனம் இலாபம், லக் ஷ்மீகரம்
கடகம் போட்டி, ஜெயம்
சிம்மம் விவேகம், வெற்றி
கன்னி தடை, சஞ்சலம்
துலாம் அமைதி, தெளிவு
விருச்சிகம் பொறுமை, நிதானம்
தனுசு இலாபம், லக் ஷ்மீகரம்
மகரம் உற்சாகம், வரவேற்பு
கும்பம் வெற்றி, அதிர்ஷ்டம்
மீனம் இன்பம் , மகிழ்ச்சி
இன்று அனுஷம் நட்சத்திரம். மகாலக் ஷ்மி தாயார் இந்நட்சத்திர தேவதையாவாள். இவள் திருமாலின் திருமார்பை விட்டு கணநேரம்கூட பிரியாதவள் இதனை பெரியாழ்வார் திருமொழியில் முதல் பத்து முதல் திருமொழியில் “அடியொமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு” என்று பாடியுள்ளார். இன்று மகாலக் ஷ்மி தாயாரை வழிபடல் நன்று
(“கண்ணீர் துயரத்தின் மௌனபாஷை”– வால்டேர்). அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
பொருந்தா எண்கள்: 2, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், சிவப்பு, இளம் மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி