தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட பட்டிமன்றத்தில் நாஞ்சில் சம்பத் அவர்கள் நடுவராக தொகுத்துவழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சிறுமியின் பேச்சு அரங்கில் இருப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. குடும்ப பக்தி யாரிடம் உள்ளது என்ற தலைப்பில் பேசப்பட்டது.
சிறுவயதில் திருமணம் செய்து வைத்தது முதல், கணவன் இறந்தது வரை தன் தாய்க்கு ஏற்பட்ட துன்பத்தையும், ஒரு பெண்பிள்ளையை வளர்ப்பது எவ்வளவு கடினம் என்பதையும் தன் அழுகுரலால் பேசிய வார்த்தைகள் மனதை உருக வைத்துள்ளது.
மேலும் குடும்ப உறவுகளால் தான்பட்ட கஷ்டம் வேறு யாருக்கும் வர கூடாது என்பதை புரிய வைத்துள்ளார் அந்த சிறுமி.