கொழும்பு அரச பேருந்து நிலையத்தில் பயணிகளிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கொழும்பு அரச பேருந்து நிலையத்தில் கூடியுள்ளனர்.
இந்நிலையில், நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
பல மணி நேரமாக காத்திருந்த போதிலும் பயணம் மேற்கொள்வதற்காக பேருந்து கிடைக்கவில்லை என பயணிகள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
நாளைய தினம் இடம்பெறவுள்ள தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனவும், அதற்காக தங்களது சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் பல மணி நேரமாக காத்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பயணிகளிடையே ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து ஆயுதம் தாங்கிய படையினர் பேருந்து நிலையத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.