கொழும்பிலுள்ள அமெரிக்க நிலையம் மீண்டும் மூடப்பட்டது!

கொழும்பிலுள்ள அமெரிக்க நிலையம் மறு அறிவித்தல் வரையில் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க காங்கிரஸில் செலவின பிரேரணை குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறைவேற்றப்படாததால் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக அரசு அலுவலகங்கள் கதவடைப்புக்கு உள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக கொழும்பிலுள்ள அமெரிக்க நிலையம் மீண்டும் மூடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கடவுச் சீட்டு மற்றும் விசா சேவைகள் இடம்பெறும் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்க அரசாங்கப் பணிகளுக்கு அடுத்த இரண்டாண்டுகளுக்கு நிதியளிக்கும் நிதிநிலை மசோதாவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டதால் அங்கு நிலவிய நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது.

முன்னதாக, அமெரிக்காவில் அரசு பணிகளை கவனிக்க நிதியளிக்கும் செலவின பிரேரணை செனட் சபையில் நிறைவேறாததன் காரணமாக கடந்த மாதம் 19ஆம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்க நிலையம் மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.