பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவரேனும் மதுபோதையில் வாக்குச் சாவடிகளில் பிரச்சினை ஏற்படுத்தினால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை செய்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மதுபோதையில் இருக்கும் நபர்களை தம்முடன் வைத்துக் கொள்ளக் கூடாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரச்சனை விளைவிக்கும் நபர்கள் உள்ளூராட்சி தேர்தல் கட்டளை சட்டம், குற்றவியல் கோவை ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கு அமைய கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.