இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் 1990ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். அனிருத் இயல்பிலேயே ஒரு சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். இவரது அப்பா பெயர் ரவி ராகவேந்திரா.
ரவி ராகவேந்திரா ஒரு சினிமா நடிகர். இவர் 1986ல் இருந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் அரசியல்வாதியாக சின்ன கேரக்டரில் நடித்திருப்பார்.
மேலும், ஜீவாவின் நீதானே என் பொன் வசந்தம் படத்தில் ஜீவாவிற்கு அப்பாவாக நடித்திருப்பார் ரவி ராகவேந்திரா.
இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த்தின் தம்பி ஆவார். தற்போது சில சீரியல்களில் நடித்து வரும் ரவி ராகவேந்திரா ‘எஸ் பேங்க்’ குழுமத்தின் தென்னிந்திய பிரிவின் தலைவராகவும் உள்ளார்.