வைரலாகும் ஜிமிக்கி கம்மலின் ஆங்கில வெர்சன்! வீடியோ

மோகன்லால் நடிப்பில் வெளியான வெளிப்பாடிண்டே புஸ்தகம் என்ற படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல் ரசிகர்கள் மூலம் நாடு முழுவதும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த பாடலுக்கு ரசிகர்கள் நடனம் ஆடி வெளியான வீடியோ பிரபலமடைந்ததை அடுத்து ஜிமிக்கி கம்மல் பாடல் பிரபலமானது. அதேபோல், கேரளா மாநிலத்தில் முஸ்லீம் மாணவிகள் நடுரோட்டில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது வெளிநாட்டில் இளம்பெண்கள் ஜிமிக்கி பாடல் மெட்டில் ஒரு ஆங்கில பாடலுக்கு நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.