தமிழகத்தில் நான்கு வயது சிறுவனை சிறுத்தை கடித்து குதறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயமுத்தூர் மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள நடுமலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் செயுதுல் (4).
சிறுவன் நேற்று வீட்டின் வாசலில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று அங்கு வந்த சிறுத்தை, செயுதுல்லை கவ்விச் சென்றுள்ளது.
இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் என 200-க்கும் மேற்பட்டோர் சிறுவனை தேடியுள்ளனர்.
இதற்கிடையில் வனத்துறையினருக்கும் இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டதால், அவர்களும் குறித்த பகுதிக்கு வந்து தேடியுள்ளனர்.
அப்போது சிறுவன் இருந்த பகுதியிலிருந்து சுமார் 1 கி.மீற்றர் தொலைவில் செயுதுல்லின் தலை தேயிலை செடிகளுக்கு அடியிலும், உடல் தனியாகவும் கிடந்துள்ளது.
இதைக் கண்டு கிராமத்தினர் மற்றும் வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து நடமாடும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் இரவு வந்துவிட்டாலே நாங்கள் தினந்தோறும் செத்து பிழைக்கிறோம் என்று கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.