கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கியுள்ள முன்னாள் போராளிகள்!

2018ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபை தேர்தல் நாளைய தினம் இடம்பெறவுள்ளது. தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 247 பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதன்முறையாக போட்டியிடுகின்றனர்.