கனடாவில் மனைவியை கொலை செய்ததால் நாடு கடத்தப்பட்ட இலங்கை அகதியை மீண்டும் நாட்டிற்கு வரவழைத்து விசாரித்து தண்டனை தரமுடியாது என்று கனடா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இலங்கைகையைச் சேர்ந்தவர் Sivaloganathan Thanabalasingham. இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு கனடாவிற்கு அகதியாக சென்றுள்ளார்.
அதன் பின் கனடா நாட்டின் நிரந்தரகுடியுரிமையை பெற்ற இவர், கடந்த 2012-ஆம் ஆண்டு மனைவியை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இதனால் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வந்தது.
56 மாதங்கள் சிறையில் இருந்த அவரை கனடா நீதிமன்றம் விடுவித்தது.
ஏனெனில் கடந்த 2016-ஆம் ஆண்டு கனடாவின் உச்ச நீதிமன்றம் ஒரு விதிமுறையை விதித்திருந்தது. அதில் கிரிமினல் வழக்குகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Sivaloganathan Thanabalasingham தொடர்பான வழக்கு அந்த கால வரம்புகளை தாண்டிவிட்டதால் நீதிமன்றம் அவரை விடுவித்தது.
கனடாவில் இந்த விதிமுறைப்படி முதல் முறை விடுவிக்கப்பட்ட நபர் Sivaloganathan Thanabalasingham தான்.
அதன் பின் வெளியே வந்த அவரை உடனடியாக குடிவரவு அதிகாரிகள் (Immigration Authorities) கைது செய்து, இது போன்ற கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர் நாட்டில் இருந்தால் மிகவும் ஆபத்து என்று கூறி, இலங்கைக்கு நாடு கடத்திவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று Crown மேல் முறையீடு செய்திருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை இது குறித்த விசாரணை நிதிமன்றத்திற்கு வந்தது. அப்போது நீதிபதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அவரை மீண்டும் அழைத்து விசாரித்து தண்டனை தர முடியாது என்று தெரிவித்துள்ளது.