குழந்தையை கொரியர் மூலம் அனாதை இல்லத்திற்கு அனுப்பிய கொடூரத் தாய்!!

சீனாவில் பெண் ஒருவர், தனக்கு பிறந்த பிஞ்சுக் குழந்தையை பிளாஸ்டிக் பையில் பார்சல் செய்து அனாதை இல்லத்திற்கு கொரியர் சேவை மூலம் அனுப்பி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் கொரியர் சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நபர், பார்சல்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நோக்கில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.தன்னிடமிருந்த பொதியினைப் பிரித்துப் பார்த்ததில், அதனுள் பிஞ்சுக்குழந்தையொன்று இருப்பதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார்.பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, குழந்தையை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.தற்போது, பொதியினுள் இருந்த பெண் குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குழந்தையின் தாயைக் கண்டுபிடித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.24 வயதான லுவோ எனும் பெண் தனது குழந்தையை பார்சலில் அனுப்பியதை ஒப்புக்கொண்டுள்ளார்.அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று, வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.