பூமியைத்தாண்டி மனிதர்களால் வசிக்க முடியுமா என்ற தேடல் மட்டுமே இப்போது உலகில் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றது என்பது தற்போதைய ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாகின்றது.குறிப்பாக இதுவரையிலும் எத்தனையோ கிரகங்கள் பூமியை ஒத்தனவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வந்தாலும் எமக்கு அருகில் உள்ள செவ்வாயில் மனிதர்கள் வாழுவதற்கான சாத்தியப்பாடுகள் இருந்து வருவதாக விஞ்ஞானிகள் நம்பிவருகின்றனர்.இதனாலே, செவ்வாய் மீதான ஆய்வுகள் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் அண்மைய ஆய்வுகளின்படி செவ்வாயில் நீர் உறைந்த நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிரகத்தின் நிலப்பகுதிக்கு கீழ் பனிக்கட்டிகள் இருக்கின்றது எனவும், இந்த பனிக்கட்டிகள் மணல் கல் போன்றன கலக்காமல் சுத்தமான நிலையில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.நிலத்திற்கு கீழ் சுமார் 90 மீற்றர் ஆழத்தில் பனிக்கட்டிகள் இருப்பதாக நம்பும் விஞ்ஞானிகள் இதன் ஆய்வுகளை முடுக்கியுள்ளனர். இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டால் செவ்வாய் குறித்து பல புதிய தகவல்கள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே செவ்வாய்கிரகம் பூமியைப்போன்றே ஒருகாலத்தில் இருந்திருக்கும், அதில் உயிரினங்களும் வாழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் விஞ்ஞானிகள் மத்தியில் பரவலாகவே உள்ளது.அதேபோன்று செவ்வாயில் வாழ்ந்தவர்கள் அறவிற் சிறந்தவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர் அதன்பின்னர் செவ்வாயில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் அங்கு வாழ்ந்தவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து விட்டதாகவும் ஒரு சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
மற்றோர் பக்கத்தில் செவ்வாயில் இப்போதும் நிலத்திற்கு கீழே வேற்றுக்கிரகவாசிகள் வாழ்ந்து வருகின்றனர் அதற்கான ஆதாரங்கள் ஒளிப்படங்கள் மூலமாக கிடைத்து வருகின்றது எனினும் இந்த விடயம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது எனவும் சில ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.
எவ்வாறாயினும் எப்போதோ நிலவையும் ஏனைய கிரகங்களையும் கடவுளாக பார்த்த மனித இனத்திற்கு தற்போது அவை கிரகங்கள் என்பது உறுதிசெய்யப்பட்டு விட்டது. இது போன்று எதிர்காலத்திலும் உண்மைகள் அம்பலமாகும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகும்.