ஊதுபத்தி ஏற்றுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரியுமா?

எல்லா மதத்தவர்களின் வீட்டிலும் ஊதுபத்தி ஏற்றுவது வழக்கமான ஒன்றாகும். ஒன்று. ஊதுபத்தியினால் வீட்டில் நறுமணம் ஏற்பட்டு, கெட்ட வாடைகள் எல்லாம் பறந்து போகின்றது.இரண்டாவது, கடவுளுக்கு பிடித்த நறுமணம் ஊதுபத்தி என்றும் சொல்லப்படுகின்றது. சரி, ஊதுபத்தி ஏற்றுவதால் என்ன பயன்கள்? ஆபத்துகள் ஏதும் உண்டா? அல்லது கடவுளுக்கு விருப்பமா? என்று பார்ப்போம்.

அதாவது, மலர்களின் நறுமணம் கிடைக்கும் இந்த ஊதுபத்தியில், ரசாயனப் பொருட்கள் அதிகமாக கலந்திருப்பதால், அது நமது உடல்நலத்திற்கு பல வகையான ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே ஊதுபத்தியின் மூலம் நமது உடல் நலத்திற்கு எவ்விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.ஊதுபத்தியினால் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் :

வீட்டில் ஊதுபத்தி பயன்படுத்துவதால், காற்றில் கார்பன் மோனாக்சைடு கலக்கிறதாம். இதனால் காற்று மாசுபாடு அடைகிறது. இதனை நாம் சுவாசிக்கும் போது, நமது நுரையீரல் பகுதியில் அலர்ஜி மற்றும் சுவாசக் கோளாறுகள், இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.  துபத்தி குச்சிகளில், கந்தக டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் மற்றும் ஃபார்மல்டிஹைடை ஆக்சைடுகள் போன்றவற்றின் கலப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த ஆக்சைடுகள் நமது நுரையீரலை அடைப்பாக்கின்றதாம். இதனால், ஆஸ்துமா பிரச்சனை ஏற்படுகின்றது.வெகுநாட்கள் வரை இருக்கும் ஊதுபத்திகளை வைத்து இருந்து அதை பயன்படுத்துவதன் மூலம் அதிலிருந்து வரும் புகையானது, நமது மென்மையான சருமத்தோடு ஊடுருவும் போது தலைவலி, அரிப்பு மற்றும் சரும அலர்ஜிகளை ஏற்படுத்துகிறது.

நாம் தினமும் அளவுக்கு அதிகமாக நம்முடைய வீட்டில் ஊதுபத்தியை பயன்படுத்தி வந்தால், அதில் உள்ள நச்சுத் தன்மை வாய்ந்த புகை நமது உடலின் நுரையீரலை சிதைத்து புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது.தினந்தோறும் ஊதுபத்தியை பயன்படுத்துவது நம்முடைய இதயத்திற்கு எதிர்வினை விளைவுகளை உண்டாக்குகிறது. மேலும், இது நமது இரத்த நாளங்களில் அழற்சிகளை உருவாக்குகிறது.