உள்ளுராட்சி தேர்தலுக்காக ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் நேற்று பகிர்ந்ததாக கூறப்படும் சம்பவத்தினால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
கற்பிட்டி, திஹலிய பிரதேசத்தில் நேற்று இரவு இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனினும் பொலிஸார் சம்பவத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த வேட்பாளர் தனது வீட்டில் இருந்து பணம் பகிர்ந்ததாக வெளியாகிய செய்திக்கமைய அந்த வீட்டை சுற்றி மக்கள் கூட்டம் கூடியுள்ளனர்.
எப்படியிருப்பினும் குறித்த சந்தர்ப்பத்தில் அந்த பிரதேசத்தில் மேலும் சிலர் இணைந்து குறித்த வீட்டில் இருந்தவர்களை சுற்றிவளைத்து தடுத்து வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் அவ்விடத்தை சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.