பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கிளிநொச்சியில் வாக்களிக்கும் மக்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூனகரி ஆகிய மூன்றுசபைகளுக்குமான தேர்தலில் 86734 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் தற்போது வாக்குப்பதிவுகள் நடைபெற்றுவருகின்றன.

இன்று காலை7 மணிமுதல் மாலை 4 மணிவரை வாக்குப்பதிவுகள்நடைபெவுள்ளன.

கிளிநொச்சிமாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகியபிரதேச சபைகளிற்கான தேர்தல்கள் இடம்பெறும் நிலையில் 100 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறித்தவாக்களிப்பு நிலையங்களிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

மூன்றுசபைகளிலும் 86734 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர்.

இதே வேளை மூன்று சபைகளிலும்40 நேரடி தெரிவு மற்றும் 26 விகிதாசாரதெரிவுகளின் மூலம் 66 ஆசனங்களை நிரப்புவதற்கு 215 பெண் வேட்பாளர்கள் அடங்கலாக638பேர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.