நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆரம்பிக்கப்பட்டு சுமூகமான முறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் யாழில் அரசியல் முக்கியஸ்தர்கள் பலரும் இன்று காலை வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களித்துள்ளனர்.
இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா, ஈ.சரவணபவன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோரும் வாக்களித்துள்ளனர்.
இதேவேளை யாழின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.