காலை உணவை ஒரு ராஜாவை போல சாப்பிட வேண்டும், மதிய உணவை ஒரு மந்திரியை போல சாப்பிட வேண்டும் மற்றும் இரவு உணவை பிச்சைக்காரனை போல சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். ஆம் நீங்கள் பள்ளியில் படிக்கும் போது இது பொருத்தமான ஒரு கருத்தாக இருக்கும். காலை உணவை நீங்கள் சாப்பிடவில்லை என்றால் அந்த நாள் நீங்கள் சோர்வாக உணர்வீர்கள். ஆனால் உடல் எடையை இழக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், காலை உணவை சாப்பிட வேண்டுமா? காலை உணவை தவிர்த்தால் உடல் எடை அதிகரித்து விடுமா? என்று தெரிந்துக்கொள்ளுங்கள்..
நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு சக்தி செலவிடப்படுகிறது. இந்த சக்தி எதிலிருந்து கிடைக்கிறது கட்டாயம் இந்த ஆற்றலானது உணவில் இருந்து தான் கிடைக்கிறது. நீங்கள் உணவு சாப்பிடுவதற்கு கூட ஒரு ஆற்றல் செலவிடப்படுகிறது. சாப்பிட்ட உணவை வயிற்றில் சேமித்து வைத்திருப்பதற்கு கூட ஒரு ஆற்றல் தேவைப்படுகிறது. இதிலிருந்தே உங்களுக்கு உணவின் முக்கியத்துவம் கண்டிப்பாக புரியும்.
எத்தனை கலோரிகள் தேவை
உங்களது கலோரி தேவையை நீங்கள் தினசரி தரும் உடல் உழைப்பு தான் தீர்மாணிக்கிறது. பொதுவாக அதிகமாக உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளில் இருப்பவர்களுக்கு தினசரி அதிக கலோரிகள் தேவைப்படுகிறது. அதுவே குறைந்த உடல் உழைப்பு, உடல் உழைப்பே இல்லாதவர்களுக்கு கலோரிகள் அதிகமாக எரிக்கப்படுவதில்லை. இதனால் இவர்களுக்கு குறைந்த கலோரிகளே போதுமானது. நீங்கள் சாப்பிடுவதை விட அதிக கலோரிகளை நீங்கள் எரித்தால் எளிதில் உடல் எடையை குறைக்கலாம்.
காலை உணவின் மகத்துவம்
நீங்கள் காலை உணவை சாப்பிடுவதன் மூலமாக உங்களது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை எளிதாக தூண்ட முடியும். இது உடல் எடையை எளிதாக குறைக்க உதவுகிறது. நீங்கள் காலையில் சாப்பிடும் அதே உணவை மாலையில் சாப்பிடாலும் கூட, இந்த அளவிற்கு மெட்டபாலிசத்தை தூண்ட முடியாது. அதற்காக நீங்கள் வேகமாக உடல் எடையை குறைத்துவிடலாம் என்று நினைத்து விடாதீர்கள். உடல் எடையை குறைக்க காலை உணவும் உதவும்.
காலை உணவை தவிர்க்கிறீர்களா?
பலர் தங்களது காலை உணவை தவிர்த்துவிட்டால் எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், இவர்கள் காலை உணவை தவிர்ப்பதால் மதியம் அதிகமாக பசி எடுக்கிறது. இதனால் மதிய உணவை அதிகமாக உட்க்கொண்டு விடுகிறார்கள். மாலை ஸ்நேக்ஸ் உடன் சேர்த்து காலை உணவை தவிர்த்தாலும் கூட அதிக உணவை சாப்பிடுகிறார்கள் இதனால் உடல் எடை அதிகரிக்கிறது.
ஹார்மோன்
நீங்கள் காலை உணவை தவிர்க்கும் போது உங்களது உடலில் பசிக்கான ஹார்மோன் அதிகமாக தூண்டப்பட்டு விடுகிறது. இதன் காரணமாக நீங்கள் அதிகம் சாப்பிட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது.
இப்படி செய்யலாம்
உங்களுக்கு உடல் எடையை குறைக்க வேண்டுமென்று இருந்தால், நீங்கள் வெறும் வயிற்றில் ஓட்ட பயிற்சி செல்லலாம். இது உடல் எடையை எளிதாக குறைக்க உதவுகிறது.
முட்டை
காலையில் தினமும் ஒன்று அல்லது இரண்டு வேக வைத்த முட்டைகளை மட்டும் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும். காலையில் முட்டையை மட்டும் சாப்பிடுவதால், பசி எடுக்காது. அதுமட்டுமின்றி உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலும் முட்டையிலிருந்தே கிடைத்துவிடும்.
ஆப்பிள்
தினமும் காலையில் ஆப்பிள் சாப்பிடலாம். இந்த ஆப்பிள் உங்களது இடுப்பில் உள்ள சதைகளை குறைக்க உதவியாக உள்ளது. மேலும் ஆப்பிள் உங்களது உடலுக்கு தேவையான சக்தியை தருவதுடன் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
வாழைப்பழம்
வாழைப்பழம் காலையில் சாப்பிடுவது நல்லது. இந்த வாழைப்பழத்தை ஓட்ஸ் உடன் சேர்ந்து சாப்பிடுவதால் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க முடியும்.