மத்தியப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவர், தீ வைத்துக்கொண்டு இளம்பெண்ணை கட்டிப்பிடித்து அவருக்கும் தீ பரவச் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேசத்தின் Chhindwara மாவட்டத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
நேற்று முன்தினம் Navneet Junghare என்ற வாலிபர், ஹொட்டலில் தனக்கு தானே தீவைத்துக் கொண்டதுடன் இளம்பெண்ணை கட்டியணைக்கு முயன்றுள்ளார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயை அணைத்து இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஏற்கெனவே ஒரு பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்ட வழக்கில் குறித்த வாலிபர் குற்றவாளியாக அறியப்படுகிறார்.
இந்த வாலிபருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சாட்சியமாக இருந்த பெண்ணையே கொல்ல முயன்றது தெரியவந்துள்ளது.
தற்கொலைக்கு முயன்றதாக அந்த இளைஞர் மீது மேலும் ஒரு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.