இலங்கையில் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் திருமண ஜோடியின் செயற்பாடு அமைந்துள்ளது.
நாடு பூராகவும் உள்ளூராட்சி தேர்தல் வாக்களிப்பு இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
இதில் நாட்டு மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வேளையில், சில விசேட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
அதற்கமைய திருமணம் செய்த தம்பதி ஒன்று திருமணத்தின் இடைநடுவில் அதே உடையில் வாக்கு சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளனர்.
காலி பிரதேசத்தை சேர்ந்த தம்பதியே இவ்வாறு வாக்களிக்க வருகைத்தந்துள்ளனர்.
திருமண கோலத்தில் இந்த தம்பத்தினர் வாக்களிப்பு நிலையத்திற்கு வருகைத்தந்த தந்த விடயம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.