படித்த இளைஞர்களை பக்கோடா விற்க சொல்வது தவறு என இந்திய அரசுக்கு நடிகை நக்மா அறிவுரை வழங்கியுள்ளார்.
இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படவில்லை, பக்கோடா விற்பது உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபடுகின்றனர் என இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.
மோடியின் அந்த கருத்துக்கு இந்தியா முழுவதும் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பாஜக தலைவர் அமித்ஷாவும் மோடி சொன்ன அதே கருத்தை மீண்டும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று நடிகை நக்மா, தொழில் தொடங்க வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு நிதி வந்தது என்பது பற்றி பாஜக கூறவில்லை.
இந்திய அரசு பல்வேறு வகைகளில் மக்களை வஞ்சித்து வருகிறது, நியாயமாக எந்த தொழில் செய்தாலும் தவறில்லை, படித்த இளைஞர்களை பக்கோடா விற்க சொல்வதுதான் தவறு என பதிலடி கொடுத்துள்ளார்.