இந்த நேரத்தில் மஹிந்தவின் முக்கிய வேண்டுகோள்!

உத்தியோகபூர்வமற்ற தேர்தல் பெறுபேறுகளை இலத்திரணியல் ஊடகத்தின் ஊடாகவோ அல்லது சமூக ஊடகங்களின் ஊடாகவோ வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள 340 மன்றங்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பல்வேறு இணைய ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனையடுத்து அவசரமாக அவர் விடுத்துள்ள வேண்டுகோளில்,

உத்தியோகபூர்வமற்ற தேர்தல் பெறுபேறுகளை இலத்திரணியல் ஊடகத்தின் ஊடாகவோ அல்லது சமூக ஊடகங்களின் ஊடாகவோ வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். சட்டத்தை மதிக்கும் பிரஜைகளிடம் இந்த வேண்டுகோளை முன் வைக்கிறேன்.

உள்ளுராட்சிமன்ற நிறுவனங்களின் தேர்தல் பெறுபேறுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படுவதுடன், பின்னர் தேர்தல் ஆணைக்குழுவினால் உறுதிசெய்யப்பட்டு தேர்தல் மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரியே அதன் பெறுபேறை வெளியிடுவார்.

அதேபோன்று தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த பெறுபேறு ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.