உடலநலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்(75) முதுகு வலி மற்றும் கழுத்து வலி காரணமாக இன்று மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பின் வீடு திரும்பியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு நேற்று மாலை திடீரென உடலநலக்குறைவு ஏற்பட்டு வலியால் அவதியுற்றுள்ளார், எனவே உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அமிதாப் பச்சனுக்கு முதுகு, கழுத்து பகுதியில் கடுமையான வலி இருப்பதாகவும், இரைப்பை பிரச்சனையும் உள்ளதால் அவருக்கு மருத்துவர்கள் எண்டோஸ்கோபி சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக பாலிவுட் நடிகர் ரிஷிகபூருடன் இணைந்து ”102 நாட் அவுட்” என்ற இந்தி படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.