கருணை கொலைக்கு அனுமதி கேட்ட இளம் பெண்!

கடும் வியாதியால் அவதிப்பட்டுவரும் இளம் பெண் ஒருவர் கருணை கொலைக்கு அனுமதி கேட்டு சிலி நாட்டு ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

சிலி நாட்டு ஜனாதிபதி மைக்கேல் பேக்கேலெட்டிடம் 19 வயது பவுலா டியாஸ் நெஞ்சை உலுக்கும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மருத்துவர்களால் கூட இதுவரை என்ன வியாதி என கண்டுபிடிக்க முடியாத நோயால் அவதிக்குள்ளாகி படுத்த படுக்கையாக உள்ளார் 19 வயதான பவுலா டியாஸ்.

சிலியின் டால்கா பகுதியில் குடியிருந்துவரும் பவுலா, தன்னால் இனி ஒரு நொடி கூட இந்த துயரங்களை தாங்கி உயிர் வாழ முடியாது என கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

மரணம் வரும் வரை என்னால் காத்திருக்கும் மன வலிமையும் இல்லை என கூறும் அவர், கருணை கொலை ஒன்றே தீர்வு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2013 நவம்பர் மாதம் முதன் முறையாக பவுலாவுக்கு நோயின் அறிகுறி காணப்பட்டதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

பவுலாவின் உடலில் காணப்படும் சில அறிகுறிகள் மருத்துவ நிபுணர்களாலையே இனம் காண முடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கால் மற்றும் கைகளில் தற்போது எந்த உணர்ச்சியும் இல்லாத நிலையில், உடல் முழுவதும் உயிர் கொல்லும் வலிகள் மட்டுமே மிஞ்சியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வெளிச்சம் உடலில் படுவதால் நெருப்பில் தள்ளிய உணர்வு ஏற்படுவதாக கூறும் பவுலா, எப்போதும் இருட்டுக்குள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்.

உடல் வலியால் தூக்கத்தை தொலைத்து அல்லும் பகலும் அவதிப்படும் தமக்கு நிம்மதியான மரணத்தை வழங்க வேண்டும் என அவர் ஜனாதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தமது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு கடும் வியாதியால் அவதிப்பட்டு வந்த 14 வயது சிறுமி Valentina Maureira-கு கருணை கொலை செய்துகொள்ளும் உத்தரவை சிலி ஜனாதிபதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.