தொடரும் திகில் சம்பிரதாயங்கள் ..!

உலகம் நவீனமாக ஆகிவிட்டாலும் பல்வேறு விதமான விசித்தர சம்பிரதாயங்களை மக்கள் இன்னும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

அப்படி இந்தியாவில் இன்னும் சில திகிலூட்டும், வினோத சம்பிரதாயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

பெண்கள் திருமணம்

ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் ஒருவரை மட்டும் செய்து கொள்ள முடியாது, தனக்கு கணவராக வரபோகும் நபரின் குடும்பத்தில் உள்ள மொத்த ஆண்களையும் மணமகள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

தவளை திருமணம்

மழை வராமல் பூமி வரண்டு போனால் இரண்டு தவளைக்கு தாலி கட்டி திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இன்றும் இந்தியாவின் பல பகுதிகளில் உள்ளது.

இப்படி செய்தால் மழைக்கடவுளான வருண பகவானின் மனம் குளிர்ந்து மழை பொழியும் என்பது இவர்களின் நம்பிக்கை!

மனைவி வீட்டில் வாழும் கணவன்

இந்திய கலாச்சாரப்படி திருமணமானதும் மணப்பெண் தனது கணவர் வீட்டுக்கு வந்துவிடுவார். ஆனால் மேகாலயாவில் உள்ள ஆண்கள் திருமணம் ஆனவுடன் தங்கள் வீட்டை விட்டு பிரிந்து மனைவி வீட்டில் சென்று அவர் குடும்பத்துடன் சேர்ந்து வாழவேண்டும்.

நாயை மணக்கும் பெண்கள்

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பகுதியில் பேய் மற்றும் காற்று கருப்பு போன்ற விடயங்கள் அதிகம் நம்பப்படுகிறது.

இதனால் இங்குள்ள இளம் பெண்கள் நாய்களை திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இப்படி செய்தால் பெண்களை எந்த தீய சக்தியும் நெருங்காது என்பது இவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பசுக்களிடம் மிதி வாங்குவது

மத்திய பிரதேசத்தில் மோவர்தன் பூஜை நடக்கும் போது ஆண்கள் பசுக்கள் அருகில் சென்று படுத்து கொள்வார்கள்.

அவர்களை பசுக்கள் மிதிக்கும். இப்படி செய்வதால் ஆண்களில் விருப்பங்கள் நிறைவேறுமாம்.

 

இளைஞர்களுக்கு அடி

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் திருமணமாகாத இளைஞர்களை பெண்கள் சேர்ந்து கொம்பால் அடிப்பார்கள்.

அந்த வலியை அவர்கள் பொருத்து கொண்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என நம்பப்படுகிறது.

 

மணலில் புதைவது

சூரிய கிரகணத்தின் போது கொல்கத்தாவில் உள்ள மோமின்பூர் பகுதியில் மாற்றுதிறனாளி சிறுவர்கள் கழுத்தளவு மணலில் புதைக்கப்படுவார்கள்.

இப்படி செய்தால் சிறுவர்களின் மனம் மற்றும் உடல் குறைபாடுகள் குணமாகும் என கூறப்படுகிறது.