ஜீரோவில் ஆரம்பித்து 5000 கோடிகள் லாபம்: தொழிலதிபரின் கதை!

வாழ்வின் பல சறுக்கல்கள் நம்மைக் காயப்படுத்தினாலும், பல முறை அவை அடுத்த படிக்கு ஏறுவதற்கான உத்வேகத்தைக் கொடுக்கின்றன.

நீங்கள் தீர்மானித்தால் இருப்பதைக் கொண்டு எவ்வளவும் உயரலாம் என்னும் பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறார் அஷோக் கபூர். ஒரு நாள் ஒன்றுமில்லாதவராக ஆக்கப்பட்ட அவர் தனது அனுபவத்தையும் கடின உழைப்பையும் கொண்டு தனது சொந்த நிறுவனத்தை நிறுவும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்.

Sona Koyo Steering என்னும் நிறுவனம் மற்றும் ஒரு நகைத் தொழில் ஆகியவற்றின் சொந்தக்காரர்களின் குடும்பத்தில் வளர்ந்தவர் அஷோக் கபூர்.

ஆனால் ஒரு நாள் நிலமை தலைகீழாயிற்று. குடும்பத்தில் சொத்து பிரித்ததில் அனைத்து முக்கிய தொழில்களின் பொறுப்பும் அவரது சகோதரர் கைக்குச் சென்றது.

47 வயதில், அஷோக்கிடம் ஒன்றுமில்லை, ஆடிப்போனார் அவர். பல இரவுகள் எப்படி இந்த பெரிய பாதிப்பிலிந்து விடுபடுவது என்று மூளையைக் குழப்பிக்கொண்டார்.

இதற்குமுன் செய்த தொழில் தந்த அனுபவம் அவரை புதிய தொழில் ஒன்றைத் தொடங்கத் தூண்டியது. 1994ஆம் ஆண்டு Krishna Maruthi Ltd என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். கார் ஜயண்ட்டான Suzuki நிறுவனத்திற்கு கார் சீட்களை சப்ளை செய்யத் தொடங்கினார். இதுவரை வேலையில்லாமல் உட்கார்ந்திருக்கும்போது மூளையில் தோன்றிய திட்டங்கள் பலன் கொடுக்கத் தொடங்கின.

தொழிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொழில் பெருகியது. பல நிறுவனங்களுக்கு சீட்களை சப்ளை செய்யத் தொடங்கினார்.

ஆனால் வாழ்க்கை ஒன்றும் பனிச்சறுக்குப் பாதை போல் வழுக்கிக் கொண்டு செல்லவில்லை.

திடீரென்று தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். ஒன்றல்ல இரண்டல்ல 18 நாட்கள். பெரிய நட்டம் ஏற்பட்டது. பல நாள் அலுவலகத்திலேயே தூங்கினார்.

இன்னொரு முறை 11 இலட்சம் மதிப்புள்ள சீட்கள் குறைபாடு இருப்பதாகக் கூறி ஒதுக்கப்பட்டன.

என்றாலும் அவர் மனம் தளரவில்லை. விடாமல் போராடினார்.

அவரது முயற்சியாலும் கடின உழைப்பாலும் அவரது நிறுவனம் தரத்திற்கான Deming Prize பெற்ற முதல் கார் நிறுவனமாயிற்று. 2005ஆம் ஆண்டு Mark Auto என்ற நிறுவனத்தை வாங்கி SKH Metals என்று அதற்கு பெயரிட்டார்.

அன்று ஜெயிக்கத் தொடங்கியதுதான் அதற்குப்பின் தோல்வியே இல்லை.

மக்களிடமிருந்து பெற்றது மக்களுக்குக் கொடுக்கப்படவேண்டும் என்னும் எண்ணம் கொண்ட அவர், மக்களுக்காக ஒரு மருத்துவமனை, பள்ளி, தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தாய் தந்தையற்றோருக்கான ஆதரவு இல்லம் ஆகியவற்றைக் உள்ளடக்கிய Community complex ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

அஷோக்கைப் போன்றவர்கள் விழுவது எழுவதற்குத்தான் என்று நமக்குக் காட்டியிருக்கிறார்கள். அவர் மட்டும் நம்பிக்கை இழந்திருப்பாரானால் இன்று நமக்கு Maruti Suzuki என்னும் நிறுவனமே கிடைத்திருக்காது. அவரால் இன்று பலர் குறைந்த விலையில் ஒரு வசதியான காரை வாங்கும் நிலையை அடைந்திருக்கிறார்கள்.

2017 -18 ஆம் ஆண்டு 5000 கோடி ரூபாய் வருவாயை அவரது நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.