உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பாரிய வெற்றியை பதிவு செய்துள்ள மஹிந்தவின் கட்சி அலுவலகம் மிகவும் பரபரப்பாக செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேர்தலின் வெற்றி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வ இறுதித் தகவல்களை இதுவரை வெளியிடவில்லை. எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகம் பரபரப்பாக செயற்பட்டு வருகிறது.
தேர்தல் செயற்பாடுகளை முழுமையாக பொறுப்பேற்று செயற்பட்ட பசில் ராஜபக்ச தனது அலுவலக பணிகளை பரபரப்பாக மேற்கொண்டு வருகிறார்.
உறுதி செய்யப்படாத தகவல்களுக்கு அமைய இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் நூற்றுக்கு 65 வீத வெற்றியை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பெற்றுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், பிரதமர் பதவியை ஏற்று கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு விடுத்த கோரிக்கையை பசில் ராஜபக்ச நிராகரித்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளை அடுத்து உடனடியாக பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்பதே பசில் ராஜபக்சவின் நிலைப்பாடக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.