முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்டவின் வீட்டுக்கு பொலிசார் சென்றுள்ளனர்.
சீ.எஸ்.என். தொலைக்காட்சி விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்காக எதிர்வரும் 13ம் திகதி பொலிஸ் நிதிமோசடிப்பிரிவின் அலுவலகத்துக்கு சமூகமளிக்குமாறு அவருக்கு பொலிசார் அழைப்பாணை ஒன்றைக் கையளித்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியான பொது ஜன பெரமுன கட்சி உள்ளூராட்சித் தேர்தலில் நாடளாவிய ரீதியில் பெருவெற்றி பெற்றுள்ள நிலையில் ரொஹான் வெலிவிட்ட பத்தரமுல்லையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு இன்று நண்பகல் வருகை தந்துள்ளார்.
அதன்போது ஹோமாகமையில் உள்ள அவரது வீட்டுக்கு பொலிசார் வருகை தந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் உடனடியாக வீட்டுக்கு விரைந்த அவரிடம் விசாரணைகளுக்கு சமூகமளிப்பது தொடர்பான அழைப்பாணையை பொலிசார் கையளித்துள்ளனர்.