நடிகை அமலா பால் தன்னை மாமிசத் துண்டு போல மலேசியாவில் வியாபாரம் செய்ய திட்டமிட்டிருந்தனர் என டுவிட்டரில் அதிர்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் மலேசியாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிக்காக நடன ஒத்திகையில் நடிகை அமலா பால் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை தொடர்பு கொண்ட அழகேசன் என்ற தொழிலதிபர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தாராம்.
மேலும் மலேசியாவில் உள்ள தொழிலதிபர் வீட்டில் நடக்கும் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து தொந்தரவு செய்ததால் அமலா பால் பொலிசில் புகார் கொடுத்தார். இதனால் பொலிஸார் அழகேசனை கைது செய்தனர்.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது தைரியமாக பொலிஸில் புகார் கொடுத்த அமலா பாலை டுவிட்டரில் பாராட்டி இருந்தார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமலா பால் டுவிட்டரில், என் பின்னால் நின்றதற்கும் ஆதரவு தெரிவித்ததற்கும் நன்றி. பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர்வது ஒவ்வொரு பெண்ணுக்குமான கடமை. அந்த நபர் என்னை மாமிசத் துண்டு போன்று வியாபாரம் செய்ய பார்த்தார். அவரின் இந்த செயல் எனக்கு எரிச்சலை தந்தது என்று பதிவிட்டுள்ளார்.
பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட பல நடிகைகள் ட்விட்டரில் “மீ டூ” (Me Too) என்ற ‘ஹேஷ்டேக்’ மூலம் அம்பலபடுத்தினர். பிரபலமான இதே ஹேஷ்டேக்கை அமலாபாலும் தற்போது பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.