இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் ஓசூரில் வசித்து வருபவர்கள் விக்டர் -ஐஸ்வர்யா தம்பதியர். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் இருந்த நிலையில் விக்டர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விக்டர் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததாகவும், அப்போது ஏற்பட்ட சண்டையில் கீழே விழுந்து அவர் மயங்கியதாகவும் கூறி ஐஸ்வர்யா அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
விக்டரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, அவர்களும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையின் போது ஐஸ்வர்யாவிற்கு குணசேகரன் என்பவருடன் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் அதை தட்டிக் கேட்ட விக்டரை இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவியே கணவனைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.