-
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. மனசாட்சி படி செயல்படும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் வந்துப் போகும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுப்பு ணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
-
மிதுனம்
மிதுனம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
-
கடகம்
கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாயமும் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். கனவு நனவாகும் நாள்.
-
கன்னி
கன்னி: மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் உண்டு. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்ப்புகள் அடங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உழைப்பால் உயரும் நாள்.
-
துலாம்
துலாம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். வெற்றிக்கு வித்திடும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உற்சாகமான நாள்.
-
தனுசு
தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். யாரையும் தூக்கி எறிந்துப் பேசாதீர்கள்-. மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.
-
மகரம்
மகரம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.
-
கும்பம்
கும்பம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.
-
மீனம்
மீனம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறை வேறும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சியால் முன்னேறும் நாள்.