கார், பைக் ரேசில் ‘ஜித்து’!- ஆனாலும் மகளுக்காக அஜித் செய்த புதிய ரேஸ்…

விசுவாசம் படத்தின் ஷூட்டிங்கிற்காக தனது அவுட் லுக்கை மாற்றி வருகிறார் அஜித் குமார். ஷூட்டிங் இல்லாத சமயத்தில் தனது நேரத்தை வேறு காரியங்களில் செலவிடும் ‘தல’ அஜித் கார், பைக் ரேசில் பலக் களங்கள் கண்டவர். ஆனால் தனது மகள் பள்ளி நிகழ்ச்சியில் அனொஷ்காவுடன் இணைந்து சைக்கிள் டயர் ஓட்டும் பந்தயத்தில் கலந்துகொண்டு விளையாடியுள்ளார். இதன் வீடியோ ஒன்று வாட்ஸப் ட்விட்டர்னு  சமூக வலைத்தளங்கள்ல வைரலா பறந்திட்டிருக்கு.

ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு சைக்கிள் டயரை உருட்டிச் செல்லும் அப்பா தடுமாற அதை பார்க்கும் அனொஷ்கா சந்தோஷமாக் சிரித்துக்கொண்டே இருக்கிறார் அடுத்த முனையை அடைந்தவுடன் மீண்டும் தந்தையும் மகளும் மருமுனைக்கு ஓடும் இந்தக் காட்சியை யாரோ ஒருவர் ஷேர் செய்ய, அஜித் தான் ஒரு ரேசர் என்பதையும் நினைப்பில் கொள்ளாமல் ‘தல’ தன் மகளுக்காக இந்த ரேசில் கலந்து கொண்டுள்ளார் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதற்கென பல ஹாஷ் டேக்குகளையும் உருவாக்கி டிரெண்டடித்து வருகின்றனர்